காலையை விட மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.32,408க்கு விற்பனை ஆகிறது.
உலகளாவிய அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகமானதால் தங்கத்தின் விலையும் கடந்த சில வாரங்களில் மிக வேகமாக உயர்ந்துள்ளது. விலை அதிகரித்த சூழலில் இந்த வார இறுதிக்குள் தங்கத்தின் விலை 32 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே இன்று காலை சவரனுக்கு 272 ரூபாய் விலை உயர்ந்து 22 காரட் தங்கம் 32 ஆயிரத்து 96 ரூபாய்க்கு உயர்ந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 4ஆயிரத்து 12 ரூபாயாக உள்ளது.
இந்நிலையில் தற்போது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.32,408க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ,4,051-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விற்பனையில் முதன்முறையாக தங்கம் விலை 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை இந்த அளவுக்கு விலை உயர்வது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.