Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.! மீண்டும் ரூ. 53 ஆயிரத்தை கடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!

Gold

Senthil Velan

, சனி, 17 ஆகஸ்ட் 2024 (10:34 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் 53 ஆயிரத்து 360 ரூபாய்க்கும், ஒரு கிராம் ரூ.6670 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் மீதான சுங்க வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்தது. சில வாரங்களுக்கு முன்னர் 3500க்கும் மேல் தங்கம் விலை குறைந்தது. பின்னர் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.

கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதன்படி நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,520-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,565-க்கு விற்பனையானது.  
 
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.53,360-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,670-ஆக விற்பனையாகிறது.  24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,125-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,000-ஆக விற்பனையாகிறது. 


வெள்ளி விலை இரண்டு ரூபாய் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.91.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடக்கம்..! காணொலி வாயிலாக துவக்கி வைத்த ஸ்டாலின்.!!