Publish Date: Fri, 16 Aug 2024 (09:53 IST)
Updated Date: Fri, 16 Aug 2024 (09:55 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக பட்ஜெட்டில் தங்கத்திற்கான வரி குறைப்பு அறிவிப்பு வெளியானவுடன் தங்கம் விலை வெகுவாக சரிந்தது என்பதையும் பார்த்தோம்.
ஆனால் அதே நேரத்தில் சரிந்த தங்கத்தின் விலை படிப்படியாக மீண்டும் உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரு கிராமுக்கு பத்து ரூபாயும் ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூபாய் 6,565 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 760 உயர்ந்து ரூபாய் 52,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.53,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,020 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,160 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 89.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 89,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது