Publish Date: Wed, 14 Aug 2024 (09:55 IST)
Updated Date: Wed, 14 Aug 2024 (09:57 IST)
தங்கம் விலை ஆகஸ்ட் 7ஆம் தேதி குறைந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின்னர் மீண்டும் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு பத்து ரூபாயும் ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ள நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 6,555 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 52,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,010 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,080 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 88.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 88,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது