Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திரும்பி போ ஸ்டாலின் ; டிரெண்டாகும் ஹேஷ்டேக் : அதிர்ச்சியில் திமுக

Advertiesment
Go back stalin
, செவ்வாய், 17 ஜூலை 2018 (13:48 IST)
லண்டனில் இருந்து ஸ்டாலின் சென்னை திரும்பவுள்ள நிலையில்,  ‘திரும்பிப் போ ஸ்டாலின்’ என்கிற ஹேஷ்டேக் சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

 
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 9ம்தேதி லண்டன் கிளம்பி சென்றார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றுள்ளார். லண்டனில் மு.க.ஸ்டாலின் சுமார் ஒருவார காலம் தங்கியிருந்து அதன்பின்னர் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.
 
அதன்படி, இன்று அவர் சென்னை திரும்புகிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ‘கோ பேக் ஸ்டாலின்’ என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. 
webdunia

 
அதாவது, அதிமுகவிற்கு எதிராக தீவிரமாக திமுக செயல்படவில்லை. திமுகவால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை என சிலரும், ஸ்டாலின் தமிழகத்தில் இல்லாத நேரத்தில்தான் கர்நாடகாவில் மழை பெய்து, காவிரியில் தண்ணீர் வருகிறது என செண்டிமெண்டாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
பிரதமர் மோடி சென்னை வந்த போது கோ பேக் மோடி என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்தது. குறிப்பாக திமுக அந்த போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தது.
இந்நிலையில், ஸ்டாலின் திரும்பிப் போ என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருக்கும் விவகாரம் திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா வழியில் மத்திய அரசை தெறிக்க விடும் எடப்பாடியார் - ஐடி ரெய்டில் செக் வைக்கும் மோடி