Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக ஆளும் மாநிலங்கள்ல போய் கம்பு சுத்துங்க! - ஆளுநர் ரவியை சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Advertiesment
MK Stalin

Prasanth K

, ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (10:54 IST)

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார்.

 

தர்மபுரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துக் கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.512 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

 

பின்னர் விழாவில் பேசிய அவர் “இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. இதை நீங்களோ நானோ மட்டும் சொல்லவில்லை. ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே சொல்கின்றன. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆளுநர் மேடைகளில் புலம்பி வருகிறார்.

 

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆளுநர் கூறுகிறார். அவர் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளை பார்த்து. பாஜக ஆளும் மாநிலங்கள் சென்று கம்பு சுற்ற வேண்டும். தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு எதிராக பேசிவரும் ஆளுநரை வைத்து பாஜக இழிவான அரசியலை செய்து வருகிறது” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

65 வயது பெற்ற தாயை இருமுறை பாலியல் பலாத்காரம் செய்த மகன்.. தகாத உறவுக்கு தண்டனை என விளக்கம்..!