திமுக, பாஜக இடையே Get Out ட்ரெண்டிங் மோதல் நடந்து வரும் நிலையில் காலை 11 மணி வரை பாஜகவின் ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
திமுக, பாஜக இடையே வாக்குவாதம் வலுத்துள்ள நிலையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, இன்று காலை முதல் Get Out Stalin என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்யப்போவதாகவும், யாருடைய ஹேஷ்டேக் அதிகம் பகிரப்படுகிறது என பார்ப்போம் என்றும் சவால் விடுத்திருந்தார்.
அதை தொடர்ந்து நேற்று மாலை முதலே திமுகவினர் பகிர்ந்த #GetOutModi ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு #GetOutStalin ஹேஷ்டேகை தொடங்கி வைத்தார். இரு கட்சியினரும் ஹேஷ்டேகுகளை வேகமாக பகிர்ந்து வரும் நிலையில் காலை முதலே இரண்டு ஹேஷ்டேகுகளும் ட்ரெண்டாகி வந்தன.
தற்போது 11 மணி நிலவரப்படி திமுகவினர் ஷேர் செய்து வந்த #GetOutModi ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் குறைந்துள்ளது. அண்ணாமலை பகிர்ந்த #GetOutStalin ஹேஷ்டேக் 619K பகிர்தல்களை தாண்டி தொடர்ந்து ட்ரெண்டிங்கில் முன்னிலையில் இருந்து வருகிறது.
அதேசமயம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தாய்மொழி தினத்தையொட்டி ஷேர் செய்த #தமிழ்_வாழ்க ஹேஷ்டேக் வேகமாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறது.
Edit by Prasanth.K