Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெட்ரோல் ! டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும்… எம்.பி. ஜோதிமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Advertiesment
பெட்ரோல் ! டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும்… எம்.பி.  ஜோதிமணி  மாவட்ட ஆட்சியரிடம் மனு
, திங்கள், 29 ஜூன் 2020 (23:28 IST)
கரூரில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் அனு அளித்தார்.

அப்போது., மத்திய ஆட்சியில் உள்ள மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை கொரனோ காலத்தில் உயர்த்தி வருகிறது. அது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 820 சதவீதம் டீசலுல், 750 சதவீதம் பெட்ரோலும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த 6 வருசத்தில் 18 லட்சம் கோடி கொள்ளை. இந்த ஒரு வருடத்தில் 3 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடித்து இருக்கிறார்கள். இன்றைய விலை 20.68 பைசா, கச்சா விலை. அந்திலிருந்து பிரிக்கும் பெட்ரோல், டீசல் விலை 80க்கும், 85க்கும் விற்பனை செய்கிறார்கள். டெல்லியில் பெட்ரோலை விட டீசல் விலை அதிகமாக இருக்கிறது. 2004 காங்கிரஸ் ஆட்சியில் டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்ய அனுமதிக்கவில்லை. உலகில் உள்ள நாடுகள் விவசாயிகளுக்கு மாதாமாதம் பணம் கொடுக்கிறார்கள்.

விவசாயிகள் மாதம் 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு எந்த நிதியும் வழங்காமல் கொள்ளையடித்து வருகிறார்கள் என்றார்.
அப்போது மாவட்ட தலைவர் சின்னசாமி உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காட்டுத்தனமாக பாகிஸ்தானியரை அடிக்கும் சீன நபர்…? வைரலாகும் வீடியோ