மழைநீர் வடிகால்களில் சேர்ந்த குப்பை! திரும்ப வரும் வெள்ளம்! - மக்கள் சிரமம்!

Prasanth Karthick
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (13:31 IST)

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மழைநீர் வடிகால்களில் குப்பை சேர்ந்ததால் தண்ணீர் வடிகால்களில் இருந்து மீண்டும் சாலையில் வெளியேறுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 

 

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதலே பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

 

கனமழை காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை நீர் வெளியேற அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில் பல பகுதிகளில் குப்பை அடைத்துள்ளதால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் சாலைகள் வெள்ளக்காட்சியாக உள்ளது. மேலும் சில இடங்களில் வடிகால் நிரம்பி நீர் வெளியேறி வருவதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 

கிண்டி பகுதியில் சாலை வெள்ளமாக காட்சியளிக்கும் நிலையில் மழைநீர் வடிக்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ்க்கு ஒருபோதும் அதிமுகவில் இனி இடமில்லை.. பாஜகவுக்கு 30 தொகுதிகள்: சேலம் மணிகண்டன்

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு மையத்தில் மெஸ்ஸி.. யானையுடன் கால்பந்து விளையாடினார்..!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகாது.. ஒரே ஒரு காரணம் இதுதான்..!

2 இரட்டை இலைக்கு 1 தாமரை. தொகுதி பங்கீட்டில் அண்ணாமலையின் ஆதிக்கம்..!

சீமான் கூட நிரூபிச்சிட்டாரு!.. விஜய் ஒன்னுமில்ல!.. இராம சீனிவாசன் நக்கல்!.

அடுத்த கட்டுரையில்
Show comments