Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் தகவலுக்கு உதவி எண்கள்.!

Siva
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (13:13 IST)
சென்னையை நெருங்கி வரும் வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தெற்கு ரயில்வே வெளியேறும் ரயில்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள உதவிக்கான தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று சென்னை - நெல்லூர் கடலோர பகுதிகளுக்கு திசைதிரும்ப கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இதனால், சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கனமழை பெய்தாலும், ரயில் சேவையில் இதுவரை பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. அதே சமயம், பயணிகள் ரயில் சேவை தொடர்பான தகவல்களை விரைவாக பெற தெற்கு ரயில்வே உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

044 - 25330952 அல்லது 044 - 25330953 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு, ரயில் நேரம் மற்றும் சேவை குறித்த விவரங்களை பயணிகள் தெளிவாக அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எதிரொலி: சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் தகவலுக்கு உதவி எண்கள்.!

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதை, போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு..!

லிப்டில் ஏற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள்.. பார்க்கிங் பிளேஸ் ஆன மொட்டை மாடி..!

கனமழை எதிரொலி: நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ரத்து..! எத்தனை நாட்கள்?

4 நாட்களுக்கு கலைஞர் நூற்றாண்டு பூங்கா மூடப்படும்: தோட்டக்கலைத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments