Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை முதல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன்: பரபரப்பில் எதிர்க்கட்சிகள்!

Advertiesment
நாளை முதல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன்: பரபரப்பில் எதிர்க்கட்சிகள்!
, புதன், 30 செப்டம்பர் 2020 (09:29 IST)
நாளை முதல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன்
மத்திய அரசின் கொள்கை திட்டமான ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே தேசம், ஒரே நாடு ஒரே ரேஷன் ஆகியவைகளை படிப்படியாக அமல்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் அக்டோபர் 1 முதல் நாடு முழுவதும் ’ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம் அமல்படுத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது 
 
இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் உள்பட ஒரு சில அரசியல் கட்சிகள் வழக்கம்போல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
இதன் மூலம் பிற மாநிலத்தில் உள்ளவர்களும் தமிழக ரேஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்து அரிசி கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரேஷனில் பயோமெட்ரிக் எனப்படும் கைரேகை கருவி பொருத்தும் பணி இன்னும் முடிவடையவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் பயோமெட்ரிக் கருவி பொருத்தும் பணியில் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாளை முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தமிழக எதிர்க்கட்சிகள் பரபரப்பில் உள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபர் 1 முதல் என்னென்ன தளர்வுகள்... தடைகள்... முழு விவரம்!!