தமிழக இந்து சமய அறநிலையத்துறை, 600 பக்தர்களை ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 2025-2026 ஆம் ஆண்டுக்கான பயண ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. பக்தர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து ரயிலில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள்.
இந்த இலவச ஆன்மிக பயணத்தில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள், இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை நேரில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், www.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் அந்தந்த இணை ஆணையர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதிகள்:
வயது: 60 முதல் 70 வயதுக்கு உட்பட்ட இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
வருமானம்: ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
முன்பு அரசு சார்பில் இலவச ஆன்மிக பயணங்களில் கலந்துகொண்டிருக்கக் கூடாது.
தேவையான ஆவணங்கள்:
வருமானச் சான்றிதழ்
மருத்துவ சான்றிதழ்
வயது சான்றிதழ்
ஆதார் அட்டை, பான் கார்டு, தொலைபேசி எண்
3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு இணை ஆணையர் அலுவலகத்தின் மூலமும் 30 பேர் வீதம், 20 அலுவலகங்களில் இருந்து மொத்தம் 600 பக்தர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பயணத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தனியாகத் தெரிவிக்கப்படும்.