உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட மேக வெடிப்பு, கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தி, வீடுகள், ஹோட்டல்கள் மற்றும் உயிர்களை காவு வாங்கியுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலர் இன்னும் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த இயற்கை பேரிடர் வயநாடு நிலச்சரிவை விட மோசமானது என்றும் கூறப்படுகிறது.
தராலி சந்தை மற்றும் தராலி கிராமம் முழுவதும் மேக வெடிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமமே கிட்டத்தட்ட காணாமல் போய் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மனேரா, பட்கோட் மற்றும் டேராடூனில் இருந்து மூன்று தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொள்ள இரண்டு குழுக்கள் ஷஸ்த்ரதர் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம், மேக வெடிப்பு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காக அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது.
ஹரித்வார்: 01374-222722, 7310913129, 7500737269, கட்டணமில்லா எண்: 1077
டேராடூன்: 0135-2710334, 2710335, 8218867005, 9058441404, கட்டணமில்லா எண்: 1070