தமிழகத்தை சேர்ந்த சிவசந்திரன் என்பவர் நான் முதல்வன் திட்டத்தின் உதவியால் படித்து UPSC தேர்வில் தமிழக அளவில் தரவரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் திறன் வளர் பயிற்சிக்காக நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற சிவசந்திரன் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அகில இந்திய தரவரிசையில் 23வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்.
இதேபோல தமிழகத்திலிருந்து நான் முதல்வன் திட்டத்தில் படித்த 134 பேரில் 50 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து மகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ”எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த நான்_முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!” என்று தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K