விஜய் அரசியல் மாநாட்டிற்கு 4 முதல்வர்களுக்கு அழைப்பா? மாஜிக்கர் சிலர் இணைய இருப்பதாக தகவல்..!

Siva
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (18:47 IST)
விஜய்யின் அரசியல் மாநாட்டிற்கு நான்கு மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை சமீபத்தில் தொடங்கிய நடிகர் விஜய் அதன் முதல் மாநாட்டை விரைவில் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான இடம் பார்க்கும் பணியும் முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில் விஜய் கட்சியின் கொடி டிசைன் செய்யப்பட்டு விட்டதாகவும் அந்த கொடியில் வாகை மலர் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் விஜய் அரசியல் கட்சியின் முதல் மாநாட்டில் நான்கு மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி என்று கூறப்படுகிறது. மற்ற 3 மாநில முதல்வர்களில் ஒருவர் தென்னிந்திய மாநில முதல்வர் என்றும் இருவர் வட இந்திய மாநில முதல்வர்கள் என்றும் கூறப்படுகிறது.
 
அதுமட்டுமின்றி தமிழக அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் சிலரும் முதல் மாநாட்டின் போது விஜய் அரசியல் கட்சியில் இணை இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் விஜய் அரசியல் கட்சியின் முதல் மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments