Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காமெடி நடிகர் தெனாலி மகனுக்கு,கல்வி கட்டணம் வழங்கி உதவி செய்தார் - நடிகர் விஜய் சேதுபதி!

Advertiesment
காமெடி நடிகர் தெனாலி மகனுக்கு,கல்வி கட்டணம் வழங்கி உதவி செய்தார் - நடிகர் விஜய் சேதுபதி!

J.Durai

, வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (12:00 IST)
விவேக் உடன் அதிக படங்களில் காமெடியில் நடித்தவர் தெனாலி. இவரது மகன் வின்னரசன் டாக்டர் எம்ஜிஆர் யுனிவர்சிட்டியில் பிசியோதெரபி படிப்பதற்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையை அறிந்த நடிகர் பாவா லட்சுமணன், நடிகர் விஜய் சேதுபதியிடம் நேரில் அழைத்துச் சென்று நிலமையை கூற, உடனடியாக 76' ஆயிரம் ரூபாய் கல்லூரியில் கட்டி, வருங்கால பிசியோதெரபி டாக்டரை உருவாக்கி உள்ளார் விஜய் சேதுபதி.
 
இது குறித்து கூறிய நடிகர் தெனாலி.....
 
என் சந்ததி கல்வியிலும், வருங்காலத்தில் பொருளாதாரத்திலும் உயர, நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவியை  வாழ்நாளில் நானும், என் மகனும் மறக்கவே முடியாது என நன்றி தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கலான் நாயகி மாளவிகாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!