திருச்சியில் பிரியாணி கடையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை திடீரென நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல்லா. இவர் சம்பவத்தன்று ஒரு பெண் கஸ்டமரை அழைத்து வருவதற்காக திருச்சியில் உள்ள பிரபலமான ஒரு பிரியாணி கடைக்கு அருகே காத்திருந்திருக்கிறார். அப்போது அந்த பெண் கஸ்டமரிடம் ஒருவர் குடித்துவிட்டு வம்பிழுத்ததாகவும், அப்துல்லா அவரை அடித்ததாகவும் கூறப்படுகிறது. அதற்குபிறகு குடிபோதையில் இருந்த அந்த நபர் தன்னோடு மூன்று பேரை அழைத்து வந்து அப்துல்லாவை அடித்து கொன்றிருக்கிறார்.
இது குறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து கொலை செய்த நாகராஜ் என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அப்துல்லா குடித்திருந்ததாகவும், தான் எந்த பெண்ணிடமும் வம்பு செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இது பற்றி அப்துலாவின் மனைவி தஸ்மீன் “என் கணவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர் அல்ல. அவர் அந்த பெண்ணை காப்பாற்றதான் அவர்களோடு சண்டை போட்டார். ஆனால் அவரை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.