கடந்த 1991ல் அதிமுக அமைச்சராக இருந்த இந்திரகுமாரி மீதான ஊழல் உறுதியானதால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1991 – 1996ம் ஆண்டு காலத்தில் அதிமுகஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர் இந்திரகுமாரி. இவர் அமைச்சராக இருந்தபோது காதுகேளாதோருக்கான நலத்திட்டங்களை வழங்குவதற்காக இவரது கணவரி நிறுவனத்திற்கே டெண்டர் ஒதுக்கி ரூ.15.45 லட்சம் முறைகேடு செய்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.