Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எச்.ராஜா அகற்றப்பட வேண்டிய தீயசக்தி! – மநீம தொழிலாளர் அணி கண்டனம்!

Advertiesment
எச்.ராஜா அகற்றப்பட வேண்டிய தீயசக்தி! – மநீம தொழிலாளர் அணி கண்டனம்!
, புதன், 29 செப்டம்பர் 2021 (09:22 IST)
ஊடகங்கள் குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசியது குறித்து மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக பாஜகவில் மூத்த தலைவராக உள்ள எச்.ராஜா சமீபத்தில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் ஊடகங்களை மிகவும் தவறான வார்த்தைகளில் விமர்சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பத்திரிக்கையாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எச்.ராஜாவின் தகாத பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி ” ஊடகவியலாளர்களைப் பார்த்து "you all media people Presstitues" என மனநோயாளி போல் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதோடு பிற அரசியல் கட்சி தலைவர்கள் குறித்தும் கீழ்த்தரமாக பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவிற்கு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

மேலும் பொது இடங்களில் நாகரிகமின்றி பேசும் எச்.ராஜா அரசியலில் இருந்த அப்புறப்படுத்த வேண்டிய தீயசக்தி என்றும், அவர்மீது தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்க ஊடகங்களை ரொம்ப மதிக்கிறோம்..! – பாஜக அண்ணாமலை விளக்கம்!