Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் கட்சி.. இதுக்கு தான் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி வந்தாரா?

Siva
செவ்வாய், 10 ஜூன் 2025 (08:33 IST)
நேற்று, முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண் என்பவர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்'த்தில் இணைந்த நிலையில், அவர் தான் அதிமுக-பாஜக கூட்டணியில் 'தமிழக வெற்றி கழகம்' இணைவதற்கான பேச்சுவார்த்தையை நடத்துவார் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திமுக இப்போதும் வலுவான கூட்டணியாக இருப்பதால், அதை வீழ்த்த வேண்டும் என்றால் எதிரணியில் ஒரு வலுவான கூட்டணி வேண்டும் என்பதை பாஜக  முதலிலிருந்தே வலியுறுத்தி வருகிறது.
 
அதனால் தான், அதிமுகவுடன் கூட்டணியில் பாஜக சேர்ந்த நிலையில், அடுத்த கட்டமாக பாமக, தேமுதிக மற்றும் சில கட்சிகளை கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
 
ஆனால் இது மட்டும் போதாது. விஜய் தனியாக நின்று ஓட்டுக்களை பிரித்தால், திமுக வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக பாஜக எண்ணுவதால், விஜய்யையும் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
 
அதற்காகத்தான், முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண் 'தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து இருப்பதாகவும், அவர் விஜய்யுடன் பேசி நிலைமையை எடுத்து சொல்லி அதிமுக-பாஜக கூட்டணிக்கு சம்மதிக்க வைப்பார் என்றும், அவரே இந்த கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் 'தமிழக வெற்றி கழக' வட்டாரங்கள் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து: 50 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்.. 7 குழந்தைகள் நிலை என்ன?

விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் பயணம் செய்தாரா? பயணிகள் லிஸ்ட்டில் அதிர்ச்சி தகவல்..!

Ahmedabad plane crash: விமானம் விபத்துக்குள்ளானது எப்படி? கடைசி நொடிகள்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Breaking: அகமதாபாத் விமான விபத்து! முதலமைச்சருக்கு போன் செய்த அமித்ஷா! ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு!

இன்று மாலை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments