ஒரே நேரத்தில் பிஏ, பிஎஸ்சி என 2 பட்டப்படிப்புகள் படிக்கலாம்: யுஜிசி அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 10 ஜூன் 2025 (08:27 IST)
மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கலாம் என்றும், அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி தருவதற்கு யூஜிசி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
தேசிய கல்விக் கொள்கையின்படி, ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரண்டு டிகிரிகளை  படிக்கலாம். அதாவது, கலை அறிவியல், தொழில்நுட்பம்  என இரண்டு டிகிரிகள் படிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கும் மாணவர்கள், இரண்டு வகுப்புகளின் நேரமும் ஒரே நேரத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல், ஒரே நேரத்தில் ஒரு பட்டப் படிப்பை நேரடியாகவும், இன்னொரு பட்டப்படிப்பை இணைய வழியாகவும் படிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், யுஜிசி நெறிமுறைகளை பின்பற்றித்தான் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிக்க வேண்டும் என்றும், இந்த விதிமுறை பிஹெச்.டி மாணவர்களுக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதே நேரத்தில், யூஜிசி அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் வாயிலாக மட்டுமே இரண்டு பட்டப்படிப்புகள் ஒரே நேரத்தில் படிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, இனிமேல் ஒரே நேரத்தில் பிஏ, பிஎஸ்சி என இரண்டு பட்டங்களையும் மாணவர்கள் படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments