Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தை பௌர்ணமி; சதுரகிரி செல்ல 4 நாட்கள் அனுமதி! – பக்தர்கள் மகிழ்ச்சி!

sathuragiri
, வியாழன், 2 பிப்ரவரி 2023 (09:00 IST)
தை பௌர்ணமி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள சுந்தரமகாலிங்க சுவாமி மலைக்கோவில் புகழ்பெற்ற சிவன் ஸ்தலமாகும். மாதம்தோறும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் சிவராத்திரி சமயங்களில் இந்த மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தமிழ்நாடு வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது தை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நாளை பிப்ரவரி 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

மலையேறும் பக்தர்கள் நீரோடைகளில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரும் இரவில் மலை பகுதிகளில் தங்குவதற்கும் அனுமதி இல்லை எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் வந்த பச்சை வால்மீன்! கண்டு ரசித்த மக்கள்!