அமைச்சர் பொன்முடி வீட்டில் கட்டு கட்டாக வெளிநாட்டு கரன்சி சிக்கியதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
பொன்முடி மகன் வீட்டிலும் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் 70 லட்சம் அளவுக்கு கணக்கில் காட்டப்படாத இந்திய கரன்சியும் 10 லட்ச ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு கரன்சியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாகத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்து உள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில முக்கிய ஆவணங்கள் பொன்முடி வீட்டில் சிக்கியதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.