Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கட்சிகளை உடைத்து அனைவரையும் பாஜக பயமுறுத்த முயற்சிக்கிறது.- முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம்

Advertiesment
arvind kejriwal
, திங்கள், 17 ஜூலை 2023 (13:36 IST)
தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவரது வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர்  சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு டெல்லி முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. விழுப்புரம் மாவட்டம் சண்முகபுரத்தில் அவரது வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

காலை முதல் 4 மணி  நேரத்திற்கு மேலாக நடைபெற்று இந்தச் சோதனையில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய  பல  இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில்,  அவரது வீட்டின் அருகே அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த மற்றொரு வீட்டின் கதவைத் திறந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்ரனர்.

மேலும், விழுப்புரம், விக்கிரவாண்டி,யில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கெ மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்,  டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ‘’அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடைபெறுவதற்குக் கண்டனம் தெரிக்கிறேன்.’’

‘’கட்சிகளை உடைத்து அனைவரையும் பாஜக பயமுறுத்த முயற்சிக்கிறது.  இந்தியா போன்ற பெரிய நாட்டை அமலாக்கத்துறையைப் பயமுறுத்தவோ மற்றும் கட்டுப்படுத்தவோ முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’அப்படியா.. எனக்கு தெரியாது’: பொன்முடி வீட்டின் சோதனை குறித்து துரைமுருகன் பதில்..!