Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்குவோம்: ஃபோர்டு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

MK Stalin meet with Ford Team

Mahendran

, வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (13:51 IST)
தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தி செய்யப்படும் என ஃபோர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை அருகே உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் ஏற்றுமதிக்கான கார் உற்பத்தி மேற்கொள்ளப்படும் எனவும் ஏற்கனவே இருந்த 12,000 ஊழியர்களுடன் கூடுதலாக 3,000 ஊழியர்களை பணியில் அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தி இருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆனால் இது குறித்து கருத்து கூறியுள்ள நெட்டிசன்கள் தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்க இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே ஃபோர்டு நிறுவனம் அறிவித்து விட்டதாகவும் தற்போது முதல்வர் சென்றபோதுதான் முதல்வரின் வேண்டுகோளுக்காக தான் கார் உற்பத்தி தொடங்கப்போவதாக கூறப்படுவது தவறான தகவல் என்றும் ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதானி குழுமத்தின் 310 மில்லியன் டாலர் சொத்து முடக்கப்பட்டதா? எந்த நாட்டில்?