Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதானி குழுமத்தின் 310 மில்லியன் டாலர் சொத்து முடக்கப்பட்டதா? எந்த நாட்டில்?

அதானி குழுமத்தின் 310 மில்லியன் டாலர் சொத்து முடக்கப்பட்டதா? எந்த நாட்டில்?

Mahendran

, வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (13:43 IST)
சுவிட்சர்லாந்து நாட்டில் அதானி குழுமத்தின் 310 மில்லியன் டாலர் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதானி குழுமம் குறித்து அவ்வப்போது குற்றச்சாட்டு கூறி வரும் ஹிண்டன் பெர்க் நிறுவனம் அதானி குழுமத்தின் பண மோசடி மற்றும் பத்திரங்கள் விசாரணை தொடர்புடைய 310 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை சுவிஸ் வாங்கிய அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து சுவிஸ் நாட்டின் உள்ளூர் ஊடகம் ஒன்றில் அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகவும் ஹிண்டன் பெர்க் நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது .2021 ஆம் ஆண்டில் அதானி மீதான பண மோசடி, பத்திரங்கள் மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக சுவிஸ் வங்கி கணக்குகளில் உள்ள இந்த நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

ஆனால் அதானி நிறுவனம் இந்த தகவலை மறுத்துள்ளது. அதானி நிறுவனத்தின் மீது எந்த ஒரு சுவிஸ் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எங்கள் நிதி நிறுவனத்தின் கணக்குகள் எதுவும் எந்த அதிகாரத்தினாலும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனம் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை என்றும் இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் விடுமுறை எதிரொலி.! தனியார் பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு.! அதிர்ச்சியில் பயணிகள்.!!