முன்பதிவில்லா பெட்டி பயணிகளுக்கு ரூ.20க்கு ரயிலில் உணவு! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Prasanth K
வியாழன், 25 செப்டம்பர் 2025 (09:05 IST)

முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக ரூ.20க்கு உணவு வழங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இந்தியா முழுவதும் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் ஐஆர்சிடிசியின் கேண்டீன் ரயிலிலேயே செயல்படுகிறது. முன்பதிவு பெட்டிகளில் உள்ளவர்களுக்கு அங்கிருந்து எளிதாக உணவுகள் வழங்கப்படுகிறது. ஆனால் முன்பதிவில்லா பெட்டிகளில் மக்கள் கூட்ட நெரிசலாக ஏறிச் செல்வதால் அவர்களுக்கும் உணவு கிடைக்கும் விதமாக ஐஆர்சிடிசி janta khana என்ற ரூ.20 விலையிலான மலிவு விலை உணவை அறிமுகப்படுத்தியது.

 

கடந்த 2023ம் ஆண்டு முதலாக இந்த திட்டம் அமலில் இருந்தாலும் பெரும்பான்மையான மக்களுக்கு இதுகுறித்து தெரியவில்லை. அதனால் மக்களின் வசதிக்காக முன்பதிவில்லா பெட்டிகள் வந்து நிற்கும் இடங்களிலேயே தற்காலிக விற்பனை மையங்களை அமைத்து ரூ.20 விலை உணவு வழங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

அதன்படி, சென்னை செண்ட்ரல், எழும்பூர், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ரயில் நிலையங்களில் இதற்கான சிறப்பு உணவு விற்பனை மையங்கள் கட்டாயம் அமைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விற்பனை மையங்களில் 200 கிராம் அளவிற்கான எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், பருப்பு கிச்சடி, பூரி கிழங்கு உள்ளிட்ட உணவுகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

மகள் செல்போனை பார்த்து கண்டித்த அப்பா.. மகளுடன் சேர்ந்து சொந்த கணவரையே கொலை செய்த மனைவி?

மம்தா பானர்ஜி தொகுதியில் பிரசாந்த் கிஷோர் வாக்காளராக இருக்கிறாரா? தேர்தல் கமிஷன் நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments