Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ-பதிவில் இருந்து விலக்கு அளிக்க.. அரசுக்கு உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை!

இ-பதிவில் இருந்து விலக்கு அளிக்க.. அரசுக்கு உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை!
, சனி, 22 மே 2021 (09:16 IST)
அமலில் இருக்கும் இ-பதிவில் இருந்து விலக்கு அளிக்க அரசுக்கு உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

 
தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும் மாவட்டங்களுக்கு உள்ளே பயணிக்கவும் இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், ஊடகவியலாளர்கள் அதாவது மீடியாக்களில் பணிபுரிபவர்களுக்கு இ-பதிவு அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளது.
 
எனவே, இ-பதிவில் இருந்து விலக்கு அளிக்க அரசுக்கு உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து உணவு டெலிவரி ஊழியர்கள் வைத்துள்ள கோரிக்கையில், கொரோனா பரவி வரும் இந்த இக்கட்டான நிலையில் இ-பதிவு கட்டாயம் என்பதால் குறித்த நேரத்தில் உணவுகளை டெலிவரி செய்ய முடியவில்லை. 
 
எனவே எங்களுக்கு இ-பதிவில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஸ்விக்கி, ஜோமோட்டோ ஊழியர்கள் அரசுக்கு வைத்த தங்கள் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

11 நாள் மோதலில் பலியான உயிர்கள் 257… 8538 பேர் காயம்!