தமிழக மீனவர்கள் விவகாரத்தில் கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களது உடமைகளை பறிபோவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதை கருத்தில் கொண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை திரும்ப பெற்று கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தீர்மானத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதத்திற்கு பிறகு குரல் வாக்கெடுப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.
Edit by Prasanth.K