நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

Siva
புதன், 2 ஏப்ரல் 2025 (08:07 IST)
நித்யானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டதாக அவருடைய அக்கா மகன் நேற்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்த நிலையில், தற்போது கைலாசா நாட்டின் முகநூல் பக்கத்தில் நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
நித்யானந்தா அக்கா மகன் வீடியோ நேற்று வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வந்த நிலையில், நித்யானந்தா நலமாக இருப்பதாகவும், அவர் இறந்து விட்டதாக பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது என்றும் கைலாசா முகநூல் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், நித்தியானந்தா அவர்களுக்கு எதிராக இந்து விரோத ஊடகங்கள் பொய் தகவல்களை பரப்பி வந்து பரப்பி வருகின்றன என்றும், கைலாசா கண்டனம் தெரிவித்துள்ளது.
 
சில ஊடகங்கள், வேண்டும் என்றே தீய நோக்கத்துடன் சட்டவிரோதமான முறையில் நித்யானந்தாவுக்கு எதிராக பொய்  தகவல்களை பரப்பி வருவதாகவும், அவர் ஆரோக்கியமாகவும், பாதுகாப்புடன், உயிருடனும் உத்வேகத்துடன் இருப்பதாக கைலாசா அறிவித்துள்ளது.
 
மேலும், நித்யானந்தாவை அவதூறு செய்ய தொடுக்கப்படும் தீய பிரச்சாரத்தை கைலாசா கண்டிக்கிறது என்றும், இந்த மாதிரியான தவறான தகவலுக்கு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளது.
 
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments