Publish Date: Fri, 12 Feb 2021 (15:33 IST)
Updated Date: Fri, 12 Feb 2021 (16:00 IST)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து, பள்ளி மாணவி உட்பட 8 பேர் உயிரிழப்பு.
சாத்தூர் அருகே அச்சங்குலத்தில் தனியாருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை செயல்படுகிறது. இந்நிலையில் பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக ஆலையில் பணிபுரிந்த 7 மற்றும் பள்ளி மாணவி ஒருவர் என 8 பேர் உயிரிழந்தனர்.
இத்தகவலறிந்த சாத்தூர் மற்றும் ஏழாயிரம் பண்னை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படுகாயமடைந்தவர்களை சாத்தூர் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் முதல் கட்டமாக உரிமையாளர் மாரியப்பபை கைது செய்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் விருதுநகர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் பெருமாள் ஆய்வு செய்து வருகிறார்.