Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள் தீப்பிடித்து விபத்து!

Fire
, வியாழன், 14 ஏப்ரல் 2022 (12:51 IST)
சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை போரூர் அருகே இ-பைக்குகள் ஷோரூம் ஒன்றில் ஊழியர் ஒருவர் பைக் பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அந்த பேட்டரி வெடித்து தீப்பிடித்தது. இதனையடுத்து அந்த ஷோ ரூமில் இருந்த மற்ற இ-பைக்குகளுக்கும் தீ வேகமாக பரவியதை அடுத்து 17 இ-பைக்குகள் அடுத்டுத்து தீயில் எரிந்து நாசமாகின
 
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்த போதிலும் அதன் 17 இ-பைக்குகளும் தீக்கிரையாகி விட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 ஏற்கனவே இ-பைக்குகள் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆங்காங்கே தீப்பிடித்து விபத்துக்கு உள்ளாகி வரும் நிலையில் சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள்  தீயில் கருகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக அரசும் புறக்கணிப்பு!