ரூபாய் 800 கோடி மோசடி செய்ததாக கூறப்பட்ட சென்னை சேர்ந்த நிதி நிறுவனர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடமிருந்து ரூபாய் 800 கோடி வரை ஹிஜாவு என்ற நிதி நிறுவனம் வசூலித்ததாகவும் இந்த இயக்குனர்களில் ஒருவரான நேரு என்பவர் நேற்று திடீரென அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிதி நிறுவனம் குறித்து பலர் காவல் துறையில் புகார் அளித்துள்ள நிலையில் இந்த நிதி நிறுவனத்தின் தலைவர்களான சௌந்தரராஜன் மற்றும் நேரு ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்த நிலையில் நேரு மட்டும் ஜாமினில் வெளியே வந்திருந்த நிலையில் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தரப்பினர் கூறியுள்ள நிலையில் இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.