மாமனார் மருமகள் சண்டை –இருவரும் விஷம் குடித்து தற்கொலை !

ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (15:26 IST)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மாமனார் விஷம் குடித்து இறந்த செய்தி அறிந்து மருமகளும் விஷம் குடித்து இறந்துள்ளார்.

ஆரணி அருகே உள்ள அனியாலை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. விவசாயியான இவர் அதிகமாகக் கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இதனால் இவரது மருமகள் கடுமையாக திட்டியுள்ளார். இது சம்மந்தமாக இருவருக்கும் அடிக்கடி சன்டை நடந்துள்ளது.

இதனால் விரக்தியடைந்த வேலு, பூச்சி மருந்தைக் குடித்து இறந்துள்ளார். இதனால் வேலுவின் தற்கொலைக்குக் காரணமாக போலீஸார் தன்னைதான் எண்ணுவார்கள் எனத் தெரிந்து தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இந்த தற்கொலைகளால் அந்த பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சீமானுக்கு எதிராக அமைப்பை தொடங்கினாரா லாரன்ஸ்? தொடரும் மோதல்!