Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 பெண் குழந்தைகளை கொன்று, மனைவியுடன் தற்கொலை செய்த பரிதாபம்: வைரலாகும் வீடியோ

Advertiesment
3 பெண் குழந்தைகளை கொன்று, மனைவியுடன் தற்கொலை செய்த பரிதாபம்: வைரலாகும் வீடியோ
, வெள்ளி, 13 டிசம்பர் 2019 (08:04 IST)
விழுப்புரம் அருகே உள்ள சித்தேரிக்கரை என்ற பகுதியை சேர்ந்த அருள் தாலி செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும்,  பிரியதர்ஷினி, யுவஷ்டி, பாரதி ஆகிய 3 பெண் குழந்தைகள் இருந்தனர். 
 
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் லாட்டரி சீட்டு பழக்கம் காரணமாக கடனாளியான அருள் கடனை அடைக்க வழி தெரியாமல் திண்டாடினார். ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை விற்று கடனில் பெரும்பகுதியை அடைத்த போதிலும் முழு கடனையும் அடைக்க முடியவில்லை. இதனால் விரக்தி அடைந்து 3 நம்பர் லாட்டரி சீட்டை வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதிலும் அவருக்கு கடன் அதிகமானதே தவிர பரிசு கிடைக்கவில்லை.
 
இதனால் மேலும் விரக்தியடைந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து சயனைடு வாங்கி தனது 3 மகள்களுக்கும் மனைவிக்கும் கொடுத்து விட்டு, தற்கொலைக்கு முன் ஒரு வீடியோவை பதிவு செய்து தனது நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். 
 
இந்த உலகத்தில் தன்னால் வாழ முடியாது என்றும், யாருக்கும் தொல்லையில்லாமல் செத்து போக விரும்புவதாகவும், தயவுசெய்து லாட்டரியை ஒழித்து கட்டுங்கள், அப்படி செய்தால்தான் என்னைபோல் யாரும் தற்கொலை முடிவை எடுக்க மாட்டார்கள் என்றும் அந்த வீடியோவில் அருள் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடியுரிமை திருத்த சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்தாலும் மாநில அரசுகள் நிறைவேற்றுமா?