சென்னை மயிலாப்பூரில் உள்ள பெண் ஒருவரை அண்ணாதுரை என்ற வாலிபர் கடந்த ஜனவரி மாதம் திருமணத்திற்காக பெண் பார்க்க வந்தார். வந்த இடத்தில் மணப்பெண்ணின் அக்காவுடன் அவர் பேசியதாக தெரிகிறது. பெண் பார்த்துவிட்டு சென்றதில் இருந்து அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. ஆனால் பெண்ணின் அக்காவுடன் அவ்வப்போது செல்போன் மூலம் தொடர்பில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென நேற்று பெண்ணின் அக்காவை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரில், பெண் பார்க்க வந்த வாலிபர், பெண்ணின் அக்காவை அவரது மூன்று வயது மகளுடன் அழைத்து சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி வீட்டிலிருந்த 5 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணத்துடன், தனது இளைய மகளை பெண் பார்க்க வந்த வாலிபருடன் தனது மூத்த மகள் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். போலீஸார் தற்போது அண்ணாதுரையையும், அந்த பெண்ணையும் தேடி வருகின்றனர்.
தங்கையை பெண் பார்க்க வந்து, அக்காவை அவருடைய மகனுடன் அழைத்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.