Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினிகாந்த் சமூக விரோதி என்று கூறியது தவறா?

ரஜினிகாந்த் சமூக விரோதி என்று கூறியது தவறா?
, புதன், 30 மே 2018 (21:04 IST)
தூத்துகுடி போராட்டம் குறித்து இன்று கருத்து கூறிய ரஜினிகாந்த், இந்த போராட்டம் கலவரமாக மாறியது சமூக விரோதியால்தான் என்று கூறியதை அரைகுறையாக புரிந்து கொண்ட லட்டர்பேட் கட்சி தலைவர்கள், அவரை வசைபாடி வருகின்றனர்.
 
துப்பாக்கி சூடு நடப்பதற்கு முன்னரே ஸ்டெர்லைட் குடியிருப்புகளுக்கு தீ வைக்கப்பட்டது. சாலையில் வன்முறையும் வெடித்தது. இந்த தீவைப்பு சம்பவத்திற்கும், வன்முறைக்கும் காரணமானவர்கள் நாளை கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு என்ன பெயர்? குற்றவாளிகள் அல்லது சமூக விரோதிகள் தானே? 
 
ரஜினி போராட்டம் செய்தவர்களையா சமூக விரோதிகள் என்று கூறினார்? கலவரம் செய்தவர்களைத்தானே சமூக விரோதிகள் என்று கூறினார். இதை புரிந்து கொள்ளாமல் அவரிடம் ஆத்திரப்படும்படி வேண்டுமென்றே கேள்வி கேட்கப்படுகிறது.
 
webdunia
தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை ஆறுதல் கூறியவர்கள் வெறுங்கையுடன் வந்த நிலையில் ரூ.2 லட்ச ரூபாய் உதவி செய்ததை எந்த மீடியாவும் ஹைலைட் செய்யவில்லை. சமூக வலைத்தள பயனாளிகளும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் யாரோ ஒருவர் யார் நீங்க? என்று கேட்டதை மட்டும் உடனே டிரெண்ட் ஆக்கியுள்ளனர். 20வருடம் ஆட்சி செய்த திராவிட இயக்க தலைவர்களை யார் நீ? என்று கேட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா? உதவி செய்ய வந்தவரை, ஆறுதல் செய்ய வந்தவரை யார் நீ? என்று கேட்பதுதான் நியாயமா?
 
இதுவரை தமிழகத்தில் காவிரி, நீட், ஜிஎஸ்டி, டாஸ்மாக் என எத்தனையோ பிரச்சனைகளுக்காக போராட்டம் நடந்துள்ளது. இந்த போராட்டங்களை எல்லாம் அரசியல்வாதிகள் தங்கள் கட்சியை வளர்த்து கொள்ள பயன்படுத்தியதால் இதில் எதுவுமே வெற்றிஅடையவில்லை. அரசியல்வாதிகள் ஒதுக்கி வைக்கப்பட்டதால் தான் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றது. அதனால்தான் போராட்டத்தின் போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ரஜினி கூறியுள்ளார். இப்போது தெரிகிறதா அவர் யாரை சமூக விரோதிகள் என்று கூறினார் என்று? 
 
எந்த பிரச்சனைக்கு தீர்வு போராட்டமோ அல்லது வன்முறையோ அல்ல, நீதிமன்றம் மூலம் தீர்வு காணுவதே சிறந்தது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே ரஜினியின் கருத்து.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக போட்டி சட்டமன்றத்தில் பங்கேற்ற கருணாஸ்!