Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை - போக்சோவில் கைது !

Advertiesment
வேலூர்
, வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (12:21 IST)
வேலூரில் பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் வேவிருபாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கர். இவருக்கு 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இவரது மகள் வயிற்று வலியால் துடித்த போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்ததால் மருத்துவமனையில் இருந்து வேலூர் சமூகநலத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இவர்கள் விசாரணை நடத்தியதில் சிறுமியின் குழந்தைக்கு அவரின் தந்தை சங்கர் தான் காரணம் என தெரியவந்தது.

இதனால் உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டு  இதன் அடிப்படையில் சங்கர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

High Budget-ல் ஒன்பிளஸ் 10T… அப்படி என்ன ஸ்பெஷல்??