கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைப்பதை வரவேற்கிறோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பேசியுள்ளார்.
மெரினா கடலுக்கு நடுவே ரூபாய் 80 கோடி செலவில் 134 அடி உயரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வடிவத்தில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் கடலுக்கு நடுவே அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பார்வையிட வசதியாக 650 மீட்டர் கண்ணாடி பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் இத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் இந்த திட்டத்தின் பணி விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ள நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பேசியுள்ளார். அவர் கூறியதாவது,
கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைப்பதை வரவேற்கிறோம். அதில் எந்த தவறும் இல்லை. கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவு சின்னம் வைக்க வேண்டாம் என கூறுபவர்களின் மரபணுவை பரிசோதிக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருணாநிதியின் பேனா வடிவ நினைவு சின்னத்தை நிறுவ அனுமதிக்க மாட்டோம் என் கூறியிருந்தார் என்பது கூடுதல் தகவல்.