Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்லூரி வகுப்பறையில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை : சென்னை அருகே துயரம்!

Advertiesment
கல்லூரி வகுப்பறையில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை : சென்னை அருகே துயரம்!
, புதன், 18 டிசம்பர் 2019 (17:38 IST)
சென்னை அருகே தனியார் கல்லூரி வகுப்பறையில் ஆசிரியை ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் காரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹரிசாந்தி. சில வருடங்களுக்கு முன்பு தனியார் கல்லூரி ஒன்றில் தெலுங்கு பாடப்பிரிவில் உதவி விரிவுரையாளராக பணியாற்றிய ஹரிசாந்தி, அரசு தேர்வெழுதி பெரம்பூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அரசு பள்ளி ஆசிரியை ஆன பிறகும் கூட முன்னர் பணிபுரிந்த தனியார் கல்லூரிக்கு செல்வதையும், அங்குள்ள தனது நண்பர்களையும், மாணவர்களையும் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் ஹரிசாந்தி. இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல கல்லூரி நண்பர்களை காண சென்ற ஹரிசாந்தி தான் பாடம் நடத்திய வகுப்பறைக்கு சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை கல்லூரி தொடங்கும் சமயம் ஹரிசாந்தி தூக்கிட்டு இறந்திருப்பதை கண்ட துறைத்தலைவர் உடனடியாக கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Flipkart Year End Sale - ஸ்மாட்போன்கள் மீது ரூ.7,000 தள்ளுபடி!!