வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி, திண்டுக்கல் தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Edit by Prasanth.K