தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்றும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதலாக டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தின் 12 மாவட்டங்களில் காலையிலேயே மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், திருச்சி, புதுக்கோட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K