Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் முன்னிலையில் எடப்பாடி அணியில் இணைந்த நிர்வாகிகள்

Webdunia
சனி, 25 மார்ச் 2023 (20:52 IST)
கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடியார் அவர்களின் தலைமையை ஏற்று முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.


மாண்புமிகு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், கரூர் தெற்கு பகுதி 42 வார்டு திமுக வை சார்ந்த கே.எம்.சி. பாலு, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சார்ந்த கார்த்திகேயன், ஓ.பி.எஸ் அணியின் கரூர் மாவட்ட பிரதிநிதி பூமாதேவி, கரூர் தெற்கு பகுதி இணை செயலாளர் செல்வம், புஞ்சை தோட்டக்குறிச்சி அவைத் தலைவர் கந்தசாமி அவர்கள் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடியார் அவர்களின் தலைமையை ஏற்று முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் முன்னிலையில் தன்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

உடன் மாவட்ட கழக இணைச் செயலாளர் மல்லிகா, கரூர் தெற்கு பகுதி செயலாளர் வி.சி.கே ஜெயராஜ், முருகேஷ், 41 வது வார்டு செயலாளர் சக்திவேல், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் கழக செயலாளர் அரவிந்த், துணை செயலாளர் சம்பூர்ணம்  உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பெண் குழந்தை பிறந்தால் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்த வேண்டும்: கலெக்டர் உத்தரவு..!

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வு..!

தங்கம் விலை இன்று சற்று சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

புதுவையில் திமுக எம்.எல்.ஏக்கள் அமளி.. குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments