Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஓ.பி.எஸ் அணியினர்

Advertiesment
karur
, செவ்வாய், 17 ஜனவரி 2023 (23:00 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் அவரது பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், அதிமுக கட்சியின் நிறுவனர் என்பதினால் அதிமுக சார்பிலும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.

கரூர் மாவட்ட அதிமுக ஒ.பி.எஸ் அணியின் சார்பில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ் அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணியின் மாவட்ட செயலாளர் ஷேக் முகமது தலைமையில் கரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கரூர், வெங்கமேடு, தாந்தோன்றிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதே போல், கரூர் மாநகராட்சி முழுவதும் சுமார் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் கரூர் மாநகர செயலாளர் ஆயில் ரமேஷ் தலைமையிலும், கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணியின் மாவட்ட செயலாளர் ஷேக் முகம்மது முன்னிலையிலும் ஆங்காங்கே நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு, இன்று பிறந்த குழந்தைகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கரூர் பேருந்து நிலையம் அருகே கரூர் மாநகர ஒ.பி.எஸ் அணியின் கட்சி சார்பில் மாநகர செயலாளர் ஆயில்ரமேஷ் தலைமையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இலவச சேலைகளும், வேஷ்டிகளும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிக்கன் பிரியாணிகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒ.பி.எஸ் அணியின் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழகம், மாநகர கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதியரை ஸ்கூட்டியின் பின்புறம் இழுத்துச் சென்ற நபர் கைது,