Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை- மாவட்ட ஆட்சியர் விளக்கம்

Advertiesment
Kanchipuram
, செவ்வாய், 21 நவம்பர் 2023 (19:27 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவர் நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதை போன்ற துர்நாற்றம் அடித்துள்ளதாக செய்திகள் பரவிய  குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் வேங்கை வயல் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி குடிநீர் தொட்டியிலும் மலம் கலக்கப்பட்டதாக வெளியான  தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவர் நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதை போன்ற துர்நாற்றம் அடித்துள்ளதாக செய்திகள் பரவியது.

இதனை அடுத்து ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதை நிறுத்தினர். இது குறித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

அதில்,  காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவர் நடு நிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில், அழுகிய முட்டையை காகம் கொண்டு வந்து தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளதாகவும், குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை என ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'பதஞ்சலி' நிறுவன விளம்பரங்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்