நவீன மருந்துகள், மற்றும் தடுப்பூசிகளுக்கு எதிராக பதஞ்சலி நிறுவன விளம்பரங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் சொந்த நிறுவனம் பதஞ்சலி. இந்த நிறுவனத்தின் மூலமாக பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தர் தைலம், சமையல் எண்ணை, சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
 
									
										
			        							
								
																	இந்த  நிறுவனத் தயாரிப்பு பொருட்களில்  ரசாயனக் கலப்பு இல்லை எனவும், இயற்கையாக உள்நாட்டில் பொருட்கள் தயாராகி வருவதாக இது விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
 
									
											
							                     
							
							
			        							
								
																	இந்த நிலையில், நவீன மருந்துகள், மற்றும் தடுப்பூசிகளுக்கு எதிராக பதஞ்சலி நிறுவன விளம்பரங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
									
			                     
							
							
			        							
								
																	மேலும், தொடர்ந்து தவறான விளம்பரங்கள் அந்த நிறுவனம் வெளியிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.