இமாச்சல பிரதேச மாநிலத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஆங்கில தேர்வின் வினாத்தாள் கசிந்து விட்டதை அடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் நேற்று பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளுக்கு பதிலாக பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளை ஆசிரியர்கள் தவறுதலாக திறந்துவிட்டனர்.
இதனால் 12 ஆம் வகுப்பு ஆங்கிலத்தால் கசிந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். இதனை அடுத்து இன்று நடக்க இருந்த பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கில தேர்வு ரத்து செய்யப்பட்டதாக இமாச்சல பிரதேசம் மாநில அரசு அறிவித்துள்ளது.
மறு தேர்வு தேதி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தவறுதலாக வினாத்தாள் பார்சலை திறந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.