Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது.! ஆர்.எஸ் பாரதி சர்ச்சை பேச்சு..!!

Advertiesment
RS Bharati

Senthil Velan

, புதன், 3 ஜூலை 2024 (14:49 IST)
நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கல்வி உரிமைக்கு தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.
 
ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆர்.எஸ் பாரதி, நான் படித்தபோது பி.ஏ. படித்தாலே போர்டு வைத்துக் கொள்வார்கள் என்றார். தற்போது நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது என்று சர்ச்சையாக பேசிய அவர், பட்டப்படிப்புகள் என்பது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று குறிப்பிட்டார்.
 
மேலும் சாதிவாரி ஒதுக்கீட்டினால் தான் எங்களில் பலர் மருத்துவர்கள் ஆனார்கள் என்றும் எங்கள் பட்டப்படிப்புகள் குலம் கோத்திர பெருமையால் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். எல்லோரும் பட்டம் பெறுவதை தடுப்பதற்கு தான் நீட் போன்ற தேர்வுகள் வந்துள்ளது என்று ஆர் எஸ் பாரதி கூறினார். மேலும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் தைரியம் எனக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஜெயக்குமார் கண்டனம்:
 
webdunia
நாய் கூட பட்டம் வாங்குகிறது என்று ஆர்.எஸ் பாரதி பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவருடைய பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ் பாரதி தரம் தாழ்ந்து பேசி இருப்பதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போதைப்பொருள் கடத்தல் மையமாக மாறிய சிறைகள்.! இபிஎஸ் குற்றச்சாட்டு.!!