Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போதைப்பொருள் கடத்தல் மையமாக மாறிய சிறைகள்.! இபிஎஸ் குற்றச்சாட்டு.!!

Advertiesment
edapadi

Senthil Velan

, புதன், 3 ஜூலை 2024 (14:36 IST)
சிறைகள் போதைப்பொருள் கடத்தல் மையமாக மாறிவிட்டது என்றும் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
 
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,  திராவிட மாடல் ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை புதிய பரிமாணம் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
 
போதைப் பொருள் விற்பவர்களை திருத்தும் சிறைச்சாலை தற்போது பாதுகாப்பு இடமாக மாறிவிட்டதா? என கேள்வி எழுப்பி உள்ள எடப்பாடி பழனிச்சாமி, போதைப்பொருட்கள் கடத்தலுக்கு துறைமுகங்கள், கொரியர் சர்வீஸ் போன்றவற்றை பயன்படுத்தி வந்த கடத்தல் பெரும் புள்ளிகள், தற்போது உச்சகட்டமாக சிறைச்சாலையையே போதைப்பொருள் கடத்தல் கேந்திரமாக பயன்படுத்தி உள்ளது சமூக பொறுப்புள்ள எவராலும் ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

 
உளவுத்துறை, மதுவிலக்கு பிரிவுகள் சிறைத்துறையுடன் இணைந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். சிறைகள் போதைப்பொருள் கடத்தல் மையமாக மாறிவிட்டது என்றும் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!