Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூத் ஸ்லிப் இல்லை என்றால் வாக்களிக்கலாமா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (13:26 IST)
பூத் ஸ்லிப் இல்லை என்றால் வாக்களிக்கலாமா?
நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள் பூத் சிலிப், வாக்காளர் அட்டை ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் அதற்கு பதிலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்பட 11 ஆவணங்களைக் கொண்டு செல்லலாம் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது அரசியல் கட்சியினர் கொடுக்கும் பூத் ஸ்லிப் இல்லாமல் வாக்களிக்கலாமா? என்ற சந்தேகம் ஒருசில வாக்காளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விளக்கமளித்த தலைமை தேர்தல் அதிகாரி, ‘பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்களிக்கலாம் என்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் உள்பட ஏதாவது ஒரு ஆவணத்துடன் வரும் வாக்காளரின் பெயர் பட்டியலில் இருந்தால் அவர் வாக்களிக்கலாம் என்றும் பூத் ஸ்லிப் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து பூத் சிலிப் இல்லாமலும் வாக்கு அளிக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments